கொம்புகள் இல்லாமல் இருந்த பசுக்கள் இங்கு வழிபட்டு கொம்புகளைப் பெற்றதால் பசுக்களின் தாயகமாக இத்தலம் கருதப்படுகிறது. ஆ-பசு. ஆதலால் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது. பசுக்கள் வழிபட்டதால் இறைவனின் திருமேனியில் அதன் குளம்பின் வடு உள்ளது. இராமபிரான் வழிபட்டதால் சுவாமிக்கு 'அபிராமேஸ்வரர்' என்ற பெயர் வந்தது.
சாபத்தினால் வன்னி மரமான பிருங்கி முனிவர் இத்தலத்து அம்பிகையை வணங்கி சாபம் நீங்கப் பெற்றார். அம்மனுக்கு தனிக்கோயில் உள்ளது. இங்கு வட்டப்பாறை அம்மன் சன்னதியும் உள்ளது.
முருகப்பெருமானின் அடியார்களுள் ஒருவரான வண்ணச்சரபம் தண்டபாணிச் சுவாமிகள் சமாதியடைந்த தலம். இவரது சமாதிக் கோயில் கோயிலுக்கு அருகில் உள்ளது.
மூவர் தேவாரம் பெற்ற சிறப்புடைய தலம். சம்பந்தரும், அப்பரும் தலா 2 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் இத்தலத்திற்கு பாடியுள்ளனர். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். காலை 6 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8.30 வரையிலும் நடை திறந்திருக்கும். தொடர்புக்கு : 9843066252, 04146-223379.
|